Athough im not a movie freak, some movies have def.ly touched my heart. And thats is gonna be the today's post.
1.Karnan :

வாழ்கையின் தத்துவத்தை சொல்லிகொடுக்கும் பாரதத்திலிருந்து ஒரு சிறு பகுதியை முழுநீளப் படமாக்கி இருகிறார்கள். மிக உயர்ந்த எண்ணங்களும், நோக்கங்களும், குணங்களும் உடையவனாய் இருப்பினும், தீயவரின் நட்பு நிச்சயம் நன்மை பயக்காது என்பது இப்படத்தின் கருத்து.
கர்ணன் என்றால் நம் எல்லோருக்கும் நினைவில் வருவது சிவாஜி கணேசன் தான். அதுவும், அந்த இறுதி கட்ட காட்சிகளில் என்.டி.ஆறும் நம்ப சிவாஜியும் சேர்ந்து எல்லோர் மனதையும் உருக்கி இருப்பார்கள்.
2.Rathakanneer :

வெள்ளி விழா கண்ட பல படங்களில் இப்படம் முன் வரிசையில் நிற்கும். ஆணவமும் அஹந்தையும் கொண்டவன் வாழ்கையின் அதலபாதாளத்தில் தள்ளப்படுவான் என்பது இப்படத்தின் கருத்து. எல்லோராலும் கவரப்பட வைக்கும் நடிப்பு கடினமானது தான் என்றாலும், எல்லோராலும் வெறுக்கப்பட வைக்கும் நடிப்பு சற்றே கடினமானது என்பது என் தாழ்மையான கருத்து. இப்படத்தில் எம்.ஆர்.ராதாவின் நடிப்பு, அற்புததம்! பாவம் மனிதர் எத்தனை பேருடைய சாபத்தை வாங்கி கட்டிக் கொண்டாரோ?! இன்னும் சொல்லவேண்டுமென்றால் எம்.ஆர்.ராதாவின் மேக்கப் ! படத்தின் முற்பகுதியில், அருமையான இளம்
வயது, படித்த வாலிபனை போல் மிக அழகாக காட்டி இருப்பார்கள், பிறகு அவர் உடல் நிலை குறைந்து சிறிது சிறிதாக அவர் அழகு சிதைந்து போவதையும் மிக அழகாக காடியிருபார்கள்...
3.Navarathiri

இந்த படத்தை பற்றி சொல்லவே தேவை இல்லை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்களில் அசத்தியிருப்பாறேன்றால் , நடிகையர் திலகம் சாவித்திரி ஒரே வேடத்தில்s கலக்கியிருப்பார். பற்றா குறைக்கு நம்ப நாகாஷ் வேறு ! வயிறு குலுங்க
சிரிக்கவைக்கும் படம். அப்பப்பா.. எதனை முறைகள் வேண்டுமென்றாலும் சலிக்காமல் பார்க்கலாம்.
4. Aanpaavam :
Excellent rib ticking comedy movie. PLs enjoy some scenes from this movie:
No comments:
Post a Comment